பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொன் விழா கொண்டாட்டம்

செங்கல்பட்டில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1968ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படிப்பினை முடித்த பழைய மாணவர்கள் அதே பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தங்கள்
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொன் விழா கொண்டாட்டம்


செங்கல்பட்டில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1968ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படிப்பினை முடித்த பழைய மாணவர்கள் அதே பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பங்களுடன் ஒன்றுகூடி விமரிசையாக பொன்விழா கொண்டாடினர். 
செங்கல்பட்டில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த 1968ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்த மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட விரும்பினர். 
அதன்படி பழைய மாணவர்களை சந்தித்து பொன்விழா கொண்டாடுவதற்காக கடந்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். வகுப்பில் தங்களுடன் படித்த ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து இந்த ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது பழைய மாணவர்களை தொலைபேசி, கைபேசி உள்ளிட்டவை மூலம் தொடர்பு கொண்டு அவரவர் குடும்பத்துடன் பள்ளியில் ஒன்றுகூடி பொன்விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. 
அதன்படி, செயின்ட் ஜோசப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழைய மாணவர்களின் பொன்விழாவில் தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் தனிஸ்லாஸ் தலைமை விருந்திரனாக கலந்துகொண்டார். பழைய மாணவர் பிச்சாண்டி வரவேற்றார். பழைய மாணவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் கமிட்டி உருப்பினர்கள் டாக்டர் சேகர், பூர்ணாநந்தன், தசரதன், தன்ஷியாம் மலானி, வழக்குரைஞர் என். நிசார் அகமது, பசுபதி, ரகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் 68, 70 வயதையும் பொருட்படுத்தாமல் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பழைய மாணவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று குடும்பத்துடன் வந்து பொன்விழாவில் கலந்து கொண்டனர். தங்களது பள்ளி அனுபவங்களையும் ஆசிரியர்களிடம் கற்று முன்னேறிய மனதில் நீங்காத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களின் வயது முதிர்ச்சியைக் கருதாமல் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 
மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வருவாய்த்துறை, கோட்டாட்சியர், ஆட்சியர், தொழிலதிபர் என்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு தாங்கள் வருவதற்கு காரணம் தங்களது ஆசிரியர்கள்தான் என்று அவர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து வசதியில்லாதபோதும் பொதுத்தேர்வில் மாணவர்கள் யாரும் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால் மாணவர்களின் மனநிலையையும் பெற்றோர்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளை தேடி வந்து பாடம் எடுக்க சைக்கிளில் வருவது வழக்கம் என்று அவர்கள் நினைவுகூர்ந்தனர். அவ்வாறு வீட்டுக்கு வந்த பாடங்களை கற்றுக்கொடுத்த ஆசியர்களால்தான் வாழ்வில் முன்னேறியதாக மேடையில் தங்களது மனவெளிப்பாடுகளை பகிர்ந்து கொண்டனர். 
பழைய மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து வழிநடத்திய வேணுகோபால், பாலசுப்பிரமணியம், ஏகாம்பரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, தனிஸ்லாஸ் ஞானப்பிரகாசம், சுப்பாராவ், ஜெயசீலன் உள்ளிட்டோரைத் தேடிக் கண்டுபிடித்து விழாவிற்கு அழைத்து வந்து கெளரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். 
விழாவில் விருந்தோம்பல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பள்ளிக்கு சில கருவிகளை வழங்கினர். முடிவில் டாக்டர் சேகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகமும் பழைய மாணவர்களும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com