ரூ.1 கோடி மின்னணு உதிரிபாகங்கள் லாரியுடன் கடத்தல்: 8 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள மின்னணு உதிரிபாகங்களை கன்டெய்னர் லாரியுடன் கடத்திச் சென்ற 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட  லாரியுடன் போலீஸார்.
கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட  லாரியுடன் போலீஸார்.


சுங்குவார்சத்திரம் அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள மின்னணு உதிரிபாகங்களை கன்டெய்னர் லாரியுடன் கடத்திச் சென்ற 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் இருந்து கடந்த 6ஆம் தேதி ரூ. 1 கோடி மதிப்பிலான மென்பொருள் உதிரிபாகங்கள் மற்றும் அவற்றைச் சேமித்து வைக்கும் பைகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. அதை திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்மணி (55) ஓட்டிச் சென்றார். 
அந்த லாரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி வரும் வழியில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிள்ளைசத்திரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார். அப்போது அவரை கார் மற்றும் பைக்கில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்றனர். மறுநாள் அதிகாலையில் குன்றத்தூர் அருகே அருள்மணியை இறக்கிவிட்டு, அக்கும்பல் தப்பிச் சென்றது.
இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த லாரி ஆந்திரத்தை நோக்கிச் செல்வதாக ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிந்துகொண்ட போலீஸார் ஆந்திரத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில், காணாமல் போன கன்டெய்னர் லாரியின் ஜி.பி.எஸ். கருவியைக் கழற்றிய அக்கும்பல், அதை வேறொரு லாரியில் வீசிச் சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் சென்னை மாதவரம் அருகில் உள்ள ஒரு கிடங்கில் அந்த லாரி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தி, லாரி மற்றும் மின்னணு உதிரிபாகங்களைப் பறிமுதல் செய்தனர். 
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மாதவரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (28), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகேஷ் (30), அலாவுதீன் (42), திருவேற்காடு தாவூத் பாஷா (32), திருவொற்றியூர் சதீஷ்குமார் (22), செய்யாறு சிவக்குமார் (34), ஆர்.கே.நகர் சதாசிவம் (25) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், கன்டெய்னர் லாரியைக் கடத்துவதற்குப் பயன்படுத்திய ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com