அனைத்துக் கட்சியினருடன் காவல் துறையினர் ஆலோசனை
By DIN | Published On : 04th April 2019 04:20 AM | Last Updated : 04th April 2019 04:20 AM | அ+அ அ- |

தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் பெருநகர் காவல்நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த பெருநகர் காவல்நிலையத்தில் உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது. அனுமதி பெற்ற பிறகே பொதுக் கூட்டங்களை நடத்தவேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க அனைத்துக் கட்சியினரும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, நூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெற உதவி புரிய வேண்டும். வாக்கு சேகரிக்கும்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விதிமுறைகளை மீறும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் தெரிவித்தார். இதில், காவல்துறையினர், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.