உத்தரமேரூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 04th April 2019 04:21 AM | Last Updated : 04th April 2019 04:21 AM | அ+அ அ- |

உத்தரமேரூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம், மணல்மேடு பகுதிகளில் அந்தந்த ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி.சோமசுந்தம் ஆகியோர், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து அவரவர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதோடு, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களைக் கண்டறிந்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை அவர்கள் வழங்கினர்.
இக்கூட்டத்தில், மாவட்ட, வட்ட, ஒன்றிய அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.