சுடச்சுட

  

  செங்கல்பட்டை அடுத்த பரனூர் சோதனைச் சாவடியில் அரசியல் கட்சியினரின் வாகனங்களை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
   காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் செல்வம் செல்வம், அமமுக சார்பில் முட்டுக்காடு முனுசாமி உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுகின்றனர். இக்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து செங்கல்பட்டை அடுத்த பரனூர் சோதனைச் சாவடியில் அரசியல் பிரமுகர்கள் யாராவது வாகனத்தில் பணம் எடுத்துச்செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க தமிக போலீஸாருடன் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் இணைந்து செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இச்சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai