திருப்போரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் க.ஊ.கருணாகரன் அத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பிரசார நிறைவையொட்டி பல்வேறு கட்சியினரும் செவ்வாய்க்கிழமை, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் க.ஊ.கருணாகரனும் கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.