மாமல்லபுரம் மீனவர்கள் வலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கின
By DIN | Published On : 04th August 2019 01:27 AM | Last Updated : 04th August 2019 01:27 AM | அ+அ அ- |

மாமல்லபுரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வீசிய வலையில் சனிக்கிழமை ரூ.50ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ளன.
ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடித் தடைக்கால உத்தரவை அரசு பிறப்பிக்கும்போது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல், படகுகள், விசைப்படகுகள், மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.