சுடச்சுட

    

    ஆக.16-ல் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கலசாபிஷேகம்

    By DIN  |   Published on : 13th August 2019 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thirukalikundram


    திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

    இக்கோயிலில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை கலசபூஜை, கலசாபிஷேகம், பட்டுப் புடவை அலங்காரம், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணத்துடன் பல்வேறு மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும்  நடைபெறவுள்ளது. 

    இதற்கான ஏற்பாடுகளை வேதமலை வல இருமுடிபெருவிழாக்குழுவினர் மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai