சுடச்சுட

  

  4,894 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி : அமைச்சர் வழங்கினார்

  By DIN  |   Published on : 15th August 2019 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  laptop


  செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளைச் சேர்ந்த 4,894 மாணவ, மாணவியருக்கு மடிக்கணிணி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
   செங்கல்பட்டு கொலம்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார்.   
  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ. ஆஞ்சலோஇருதயசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், மாவட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகச் செயலாளரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான திருக்கழுகுன்றம்  எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  
  விழாவில், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி-நந்திவரம், சிங்கபெருமாள்கோவில், மாம்பாக்கம், மறைமலைநகர் , ஓட்டேரி விரிவு, அஞ்சூர் உள்ளிட்ட 18 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,894 மாணவ, மாணவியருக்கு  அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்.  
  இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் கவுஸ்பாஷா, வழக்குரைஞர்கள் ஆறுமுகம், விநாயகம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) அ.பிரபாகர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai