29-இல் மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப்போட்டிகள் வரும் 29-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப்போட்டிகள் வரும் 29-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழக கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவஉஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான   கலைப் போட்டிகள் காஞ்சிபுரம்  மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் வியாழக்கிழமை (ஆக. 29) நடைபெறுகிறது.
இதில், குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். குரலிசை, பரதநாட்டியப் போட்டிகள் காலையிலும், ஓவியம், நாட்டுப்புற நடனப் போட்டிகள் மதியமும் நடைபெறும். 
3 பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி: இப்போட்டிகள் 5 - 8,  9-12, 13-16  என்ற வயதுப் பிரிவுகளில்  நடைபெறும்.  காஞ்சிபுரம் சதாவரத்தில் மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு இசைப்பள்ளி வளாகத்தில் (காது கேளாதோர் பள்ளி அருகில்) இப்போட்டிகள் நடைபெறும்.  மேலும் விவரங்களுக்கு 044-27269148 அல்லது 044-27268190 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.    
போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்கும் போதே தெரிவிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலிருந்து வயதுச் சான்று கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விவரங்கள் செல்லிடப்பேசி மூலமாக தெரிவிக்கப்படும். 
இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டிக்கு அரசு சார்பில் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com