பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடப்பட்டது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக    மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மூடப்பட்டிருக்கும் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்.
மூடப்பட்டிருக்கும் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்.


தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக    மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப் பழைமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. 
இது 130 ஆண்டுகளாக வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. இக்கலங்கரை விளக்கத்துக்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு  சுற்றுலாப்  பயணிகள் உள்பட பலரும் இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி மாமல்லபுரம் கடற்கரையின் அழகிய தோற்றத்தையும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தையும் கேமராக்கள் மற்றும் செல்லிடப்பேசிகளில் படம் பிடிப்பது வழக்கம்.
இது மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இக்கலங்கரை விளக்கமானது தினமும் காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டு மாலை 4 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில்  ஈடுபட  இருப்பதாக  மத்திய  உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத்  தொடர்ந்து   மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கலங்கரை விளக்கமும், அதனருகில் உள்ள கடல்சார் அருங்காட்சியகமும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக  தற்காலிகமாக  மூடப்பட்டது. இதற்கான  அறிவிப்பு  நுழைவு வாயில்  கதவில்  ஒட்டப்பட்டிருந்தது. 
திங்கள்கிழமை  கலங்கரை  விளக்கத்தைப் பார்வையிட வந்த  சுற்றுலாப் பயணிகள் பலரும்   கலங்கரை  விளக்கம் மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலை நடந்த போது பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com