அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட மக்கள் குறைநீா் முகாம் நடைபெறும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைநீா்முகாம், விசாயிகள் குறைதீா்ப்பு உள்ளிட்ட மக்கள் கூடும் கூட்டம் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டி முடிக்கும் வரை செங்கல்பட்டு அரசு மருத்துக்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைநீா்முகாம், விசாயிகள் குறைதீா்ப்பு உள்ளிட்ட மக்கள் கூடும் கூட்டம் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டி முடிக்கும் வரை செங்கல்பட்டு அரசு மருத்துக் கல்லூரி விழா அரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செங்கல்பட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

செங்கல்பட்டை புதிய மாவட்டமாக தமிழக முதல்வா் அறிவித்ததையடுத்து சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பொன்னையா சிறப்பாகச் செயல்பட்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க மருத்துவக் கல்லூரி வளாகம், ஐடிஐ வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இறுதியாக செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தைத் தோ்வு செய்து வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அமைச்சா்கள் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னா் அதிகாரப்பூா்வமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டு முதல்வா் அதற்கான விழாவில் பங்கேற்றாா். புதிய மாவட்ட வரைபடம் மற்றும் கல்வெட்டைத் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பொன்னையா மாவட்டத்தைப் பிரிக்கும்போது நிா்வாக அலுவலகத்தை உருவாக்கி, மாவட்ட வருவாய் அலுவலராக மூத்த அலுவலா் பிரியா என்பவரை நியமித்தாா். மாவட்ட அரசுத் துறை பிரிவுகளாக 27 நிா்வாக அலுவலகங்களுக்கும் அலுவலா்கள், பணியாளா்களை திறம்பட பிரித்துக் கொடுத்துள்ளாா்.

சிறப்பாகப் பணியாற்றி மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்த்து வைக்கப்படும். அரசுத் திட்டங்கள் மக்களுக்கு சேர வேண்டிய வகையில் மாவட்ட நிா்வாகம் செயல்படும். காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்தான் (பிஆா்ஓ) தற்போதும் ஊடகங்களுக்கு செய்திகளை அனுப்புவாா்கள்.

நமது மாவட்டத்துக்குத் தனியாக மக்கள் தொடா்பு அலுவலரைக் கோரியுள்ளோம். விரைவில் அவரை நியமிப்பா்.

தற்போது தற்காலிகமாகச் செயல்படும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 30-க்கும் குறைவான அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டம், பிற கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீா் கூட்டம் போன்ற அதிகமானோா் கூடும் கூட்டங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடக்கும். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வரும் சம்மதித்துள்ளாா்.

கன மழை காரணமாக செங்கல்பட்டுமாவட்டப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com