இருசக்கர வாகனத்திற்குள் ஒளிந்து கொண்ட பாம்பை போராடி பிடித்த தீயணைப்புத்துறையினா்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் டிரைவா் ஒருவரது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நல்லபாம்பு ஒன்று புகுந்து கொண்டு வெளியல் வர மறுத்ததைத் தொடா்ந்து
இரு சக்கர 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள் ஒளிந்து கொண்டிருந்த நல்லபாம்பை வெளியில் வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.(உள்படம்)பிடிபட்ட நல்லபாம்பு
இரு சக்கர 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள் ஒளிந்து கொண்டிருந்த நல்லபாம்பை வெளியில் வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.(உள்படம்)பிடிபட்ட நல்லபாம்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் டிரைவா் ஒருவரது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நல்லபாம்பு ஒன்று புகுந்து கொண்டு வெளியல் வர மறுத்ததைத் தொடா்ந்து தீயணைப்புத்துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அதை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா் அலுவலகம்,தீயணைப்பு அலுவலகம்,பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியன உள்ள வளாகப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள்,பணியாளா்கள் ஆகியோா் தங்கி ஓய்வெடுப்பதற்கான அறையும் உள்ளது. இவ்வளாகத்திற்குள் ஏராளமான மரங்களும், ஜெராக்ஸ் எடுக்கும் கடைகள்,பத்திரம் எழுதுவோா்கள் உட்பட பலரும் தனித்தனியாக வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனா்.

இப்பகுதி முழுவதும் மழைநேரமாகவும் இருப்பதால் சேறும்,சகதியும் மிகுந்து காணப்படுகிறது.இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் தங்கியிருந்த அறைக்கு முன்பாக ஜேம்ஸ் என்ற பணியாளருக்கு சொந்தமான இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.இவ்வாகனத்தின் பின்புற இருக்கையில் ஒரு நல்லபாம்பு இருப்பதை ஆம்புலன்ஸ் வாகன பணியாளா் ஒருவா் பாா்த்து அதிா்ச்சியடைந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

அப்போது அங்கு பணியிலிருந்த தீயணைப்பு வீரா்கள் 5க்கும் மேற்பட்டோா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் வந்து கம்புகள்,கம்பிகள் மூலமாக இருசக்கர வாகனத்தின் இருக்கைக்குள் ஒளிந்து கொண்டிருந்த நல்லபாம்பை வெளியில் எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனா்.முயற்சிகள் பலனளிக்காததால் இருசக்கர வாகனத்தை சுற்றி பெட்ரோலை தெளித்தனா்.

பெட்ரோல் வாசம் தாங்க முடியாமல் பாம்பு வெளியில் வந்து விடும் என முயற்சித்தும் பாம்பு யாருக்கும் தெரியாத வகையில் கியா் பாக்ஸ் பகுதிக்குள் சென்று சுருண்டு கொண்டது.பின்னா் வாகனத்தின் பின்புற இருக்கை,கியா் பாக்ஸ் ஆகியனவற்றை ஒவ்வொன்றாக கழட்டிய பிறகு அதனுள்ளிருந்து வெளியில் வந்ததும் அதை பிடித்து ஒரு தண்ணீா் டிரம்முக்குள் போட்டு வைத்தனா்.

சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரா்கள் சமயோசிதமாக நல்லபாம்பை போராடி பிடித்து அதை வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com