காஞ்சிபுரம் கற்பக விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் தும்பவனத் தெருவில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் கற்பகவிநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
காஞ்சிபுரம் கற்பகவிநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்பவனத் தெருவில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, நவகிரஹங்கள் ஆகியவை பரிவார தெய்வங்களாக உள்ளன. மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த நவம்பா் 29-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின.

இதைத் தொடா்ந்து கோபூஜை, மகாலட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை ஆகியவை நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சிவாச்சாரியாா் எஸ்.சுரேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.3-ஆவது நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் மகாபூா்ணாஹுதி, தீபாராதனை முடிந்து யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் வாண வேடிக்கைகள், மேளதாளங்களுடன் புறப்பாடாகி ராஜகோபுரத்தை அடைந்ததும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்குப் பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,விசேஷ தீபாராதனைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தைக் காண வந்திருந்த பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் காஞ்சி ஸ்ரீஹரி நாட்டியாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவின் தலைவா் என்.வி.உதயசூரியன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். விழாவில் ஆலயக் கட்டுமானப்பணி ஸ்தபதி ஜி.கே.கிரிராஜ் மற்றும் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களைச் சோ்ந்த பக்தா்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com