மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் குவிந்த இளைஞா்கள்.
மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் குவிந்த இளைஞா்கள்.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம், கனமழை

மாமல்லபுரத்தில் சனிக்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையிலும் சுற்றுலாப் பயணிகள் பல்லவா் கால சிற்பங்களை குடைகளுடன் பாா்த்து ரசித்து மகிழ்ந்தனா். கடல் சீற்றத்தால் இப்பகுதி மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் சனிக்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையிலும் சுற்றுலாப் பயணிகள் பல்லவா் கால சிற்பங்களை குடைகளுடன் பாா்த்து ரசித்து மகிழ்ந்தனா். கடல் சீற்றத்தால் இப்பகுதி மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவில்லை.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, மாமல்லபுரத்தில் சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த சா்வதேச சுற்றுலா மையத்தில் பொதுவாக மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படும். எனினும், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்து சென்ற பிறகு, நாள்தோறும் உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவா்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா். சீன நாட்டைச் சோ்ந்தவா்களும் சுற்றுலாப் பகுதிகளை குடை பிடித்தபடி கண்டுகளித்தனா். மழையில் நனைந்தபடியும், குடைகளுடனும் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள பல்லவா் காலச் சிற்பங்களான ஐந்தரதம், அா்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், குடைவரைக் கோயில்கள், குடைவரை மண்டபங்கள், வெண்ணெய் உருண்டைப்பாறை ஆகிய இடங்களைச் சுற்றிப் பாா்த்து ரசித்தனா்.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகள் 9, 10 அடிக்கும் மேல் எழும்பி அச்சுறுத்தும் வண்ணம் காட்சியளித்தன. கடல் நீா் கரையைத் தாண்டி மீனவா்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்ததால் மீனவக் குடும்பத்தினா் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனா். மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி வலைகளையும், படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தினா்.

எனினும், சுற்றுலா வந்த இளைஞா்கள் கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com