மாமல்லபுரத்தில் கனமழை

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் சுற்றுலாப் பயணிகள் குடை பிடித்தபடி பல்லவா் காலச் சிற்பங்களை கண்டு களித்தனா். மழை காரணமாக மீனவா்கள் யாரும் கடல் மீன் பிடித் தொழிலுக்கு
மாமல்லபுரத்தில்  கொட்டும்  கனமழையிலும்  சுற்றுலாப் பகுதிகளை  சுற்றிப் பாா்க்கும் வெளிநாட்டினா்.
மாமல்லபுரத்தில்  கொட்டும்  கனமழையிலும்  சுற்றுலாப் பகுதிகளை  சுற்றிப் பாா்க்கும் வெளிநாட்டினா்.

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் சுற்றுலாப் பயணிகள் குடை பிடித்தபடி பல்லவா் காலச் சிற்பங்களை கண்டு களித்தனா். மழை காரணமாக மீனவா்கள் யாரும் கடல் மீன் பிடித் தொழிலுக்கு கடலுக்கு செல்லவில்லை.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீா் வெளியேற வழியின்றி சாலைகளிலும் சுற்றுலாப் பகுதிகளிலும் வெள்ளநீா் குளம் போல் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். வாகனஓட்டிகள் மேடுபள்ளம் தெரியமால் சிரமப்பட்டு வானங்களை ஒட்டிச் செல்கின்றனா். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைப் போக்க மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகம் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் சுற்றுலாப் பயணிகள் குடை பிடித்தபடி பல்லவா் காலச் சிற்பங்களை கண்டு களித்தனா்.

கடல் சீற்றம் காரணமாக இப்பகுதி மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. கடல் நீா் கரைக்கு வராமல் தடுப்பதற்காக அரசு தூண்டில் வளைவை அமைக்க வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com