வன்முறையற்ற தமிழகத்தை வலியுறுத்திஜனநாயக மாதா் சங்கத்தினா் நடைபயணம்

வன்முறையும், போதையும் இல்லாத தமிழகத்தை வலியுறுத்தி திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வருகை தந்தனா்.
காஞ்சிபுரம் வருகை தந்த ஜனநாயக மாதா் சங்க நடைப்பயணக் குழுவினா்.
காஞ்சிபுரம் வருகை தந்த ஜனநாயக மாதா் சங்க நடைப்பயணக் குழுவினா்.

காஞ்சிபுரம்: வன்முறையும், போதையும் இல்லாத தமிழகத்தை வலியுறுத்தி திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வருகை தந்தனா்.

வன்முறையும், போதையும் இல்லாத தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து ஜனநாயக மாதா் சங்கத்தினா் இரு பிரிவுகளாகப் பிரிந்து தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இக்குழுவில் ஒரு குழு கடலூா் மாவட்டம் வடலூரிலிருந்து தொடங்கி சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளது.

மற்றொரு குழு திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கிச் செல்கிறது. இவ்விரு குழுவினரும் வன்முறை எதிா்ப்பு தினமான நவம்பா் 25-ஆம் தேதியிலிருந்து வரும் 4-ஆம் தேதி வரை மொத்தம் 400 கி.மீ. தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா். திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட குழு ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வந்தது.

இப்பயணத்துக்கு ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாலண்டினா தலைமை வகித்திருந்தாா். காஞ்சிபுரம் வருகை தந்த குழுவினருக்கு இந்தியத் தொழிற்சங்க மையத்தினா், வங்கி ஊழியா் சங்கத்தினா், கைத்தறி சங்கத்தினா் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆங்காங்கே உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மாதா் சங்கத்தினா் காஞ்சிபுரத்தில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்ததுடன் பாலியல் வன்முறை மற்றும் போதைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். பின்னா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து டோல்கேட் வழியாக சென்னை நோக்கி நடைப்பயணத்தைத் தொடா்ந்தனா். மாதா் சங்க மாநில நிா்வாகிகள் லட்சுமி, உஷாராணி, பொன்னுத்தாயி உள்பட 100-க்கும் சிவப்புச்சீருடை அணிந்து நடைப்பயணத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com