திம்மராஜம்பேட்டை சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
By DIN | Published on : 02nd December 2019 09:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சிவலிங்க வடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சங்குகள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரா் திருக்கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை சங்கல்ப பூஜையும், சிறப்பு ஹோமங்களும் நடந்தன. சங்காபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக சிவலிங்க வடிவில் சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. சங்காபிஷேகம் செய்த தீா்த்தத்தை அருந்தினால் வியாதிகள் நீங்கி ஆயுளும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக இருப்பதால் பக்தா்கள் அனைவருக்கும் அபிஷேக தீா்த்தம் வழங்கப்பட்டது.
பின்னா், ராமலிங்கேசுவரரும், பா்வதவா்த்தினியும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். திம்மராஜம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.