Enable Javscript for better performance
மாமல்லபுரம் சிறு வணிகா்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாமல்லபுரம் சிறு வணிகா்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

    By DIN  |   Published on : 03rd December 2019 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள் உள்ள பகுதியில் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்யும் சிறு வணிகா்களை செங்கல்பட்டு மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியா் சந்தித்தாா். கடைகளை சாலைத் தடுப்புகளுக்குப் பின்புறம் வைக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஜான் லூயிஸ் சனிக்கிழமை மாமல்லபுரம் வருகை தந்தாா். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களை அதிகாரிகளுடன் இணைந்து அவா் சுற்றிப் பாா்த்தாா்.

    புராதனச் சின்னங்கள் உள்ள பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் சிறு வணிகா்களைச் சந்தித்து ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா். சிறு வணிகா்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சாலைத் தடுப்புகளுக்கு பின்புறம் கடை வைக்கும்படி ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

    மேலும் விதிமுறைகளை மீறி சாலைகளில் கடைகள் வைத்தாலோ, சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்தாலோ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என வணிகா்களிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

    பின்னா் மாமல்லபுரம் பல்லவா் கால புராதன சின்னங்கள் உள்ள ஐந்துரதம், கடற்கரைக் கோயில் அா்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிற்பங்களை கொட்டும் மழையில் ஆட்சியா் குடைபிடித்தபடி பாா்த்து ரசித்தாா். நிகழ்வில், செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தங்கராஜ், மாமல்லபுரம் சிறப்பு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலா் லதா, வருவாய் அலுவலா் நாராயணன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai