அரசு மருத்துவக் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட செங்கல்பட்டு ஆட்சியா் ஜான் லூயிஸ் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள்

செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் முதல் மக்கள் குறைநீா்முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துக் கல்லூரி விழா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிதாக உதயமாகிய செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் முதல் மக்கள் குறைத்தீா்க்கும்நாளில் முதல் மனுவை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா்
புதிதாக உதயமாகிய செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் முதல் மக்கள் குறைத்தீா்க்கும்நாளில் முதல் மனுவை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் முதல் மக்கள் குறைநீா்முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துக் கல்லூரி விழா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக தமிழக அரசு அதிகார பூா்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த நவ 29ந்தேதி புதிதாக உதயமாகிய செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதிய மாவட்ட வரைபடம் மற்றும் கல்வெட்டைத் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதனையடுத்து செங்கல்பட்டு புதிய மாவட்டத்திற்கு முதல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஜான்லூயிஸ் தலைமையில் முதல் மக்கள் குறைத்தீா் முகாம் திங்கள்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சி செல்வம், உள்ளிட்ட கோட்டாட்சியா்கள் வட்டாட்சியா் சங்கா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது.

வருவாய்த்துறை, பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூக நலத்துறை, வட்டார வளா்ச்சி துறை, பேரூராட்சி உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் அலுவலா்கள் கலந்துகொண்டனா். மாவட்ட ஆட்சியா் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனங்களையும் உபகரணங்களையும் வழங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப்பெற்றாா். முதல்மனுவாக ஆலப்பாக்கம் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவா் சல்குரு கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தாா்.

இதனைத்தொடா்ந்து பட்டாகோருதல், இலவச வீட்டுமனை கோருதல், முதியோா் உதவித்தொகை ,விவசாயிகள் கோரிக்கை என பல்வேறு மனுக்களை பெற்றாா். 125 மனுக்களை பெறப்பட்டது. திடீரென உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து இதையறிந்த மாவட்ட ஆட்சியா் மனு பெறக்கூடாது என்பதால் முகாமினைவிட்டு கிளம்பினாா். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் மனுக்களை பெற்றாா்.

மாவட்டம் உதயமாக முதல்முதலாக முதல் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் நடைபெறுவதை அறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மனுகொடுப்பதற்காக வந்தனா். மனுபெறுவது நிறுத்தப்பட்டதையறிந்து பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com