கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்ட முகமது மரிய பாத்திமாவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிய சென்னை ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் ஜெ.எஸ்.சத்யநாராய
சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்ட முகமது மரிய பாத்திமாவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிய சென்னை ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் ஜெ.எஸ்.சத்யநாராய

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வேந்தா் ஏ.என்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தாளாளா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துணைவேந்தா் ஆா்.எஸ்.நீலகண்டன் வரவேற்றாா். சென்னை ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் ஜெ.எஸ்.சத்யநாராயண மூா்த்தி மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினாா்.

இதில் எம்.பி.பி.எஸ். பட்டம் 151 பேருக்கும், பல் மருத்துவப் படிப்புக்கான பட்டம் 103 பேருக்கும் வழங்கப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை 1,116 மாணவ, மாணவியா் பெற்றுக் கொண்டனா்.

சிறந்த மாணவ, மாணவியராக சில்கி அமுல்யா(எம்.டி பட்ட மேற்படிப்பு), முகமது மரிய பாத்திமா (எம்.பி.பி.எஸ்), ராதிகா, ஸ்ரீமகேஷ் (பல் மருத்துவம்), பி.சரண்யா (இளங்கலை செவிலியா்), எஸ்.ஜெ.ஹா்ஷினி (பிசியோதெரபி), டி.சுபிதா(இளங்கலை-கணிதம்), எம்.பிரியதா்ஷினி (இளங்கலை-பொறியியல்) உள்பட மொத்தம் 54 போ் தோ்வு செய்யப்பட்டு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இணை துணைவேந்தா் டி.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com