கூத்தவாக்கம் ஏரிக்கரை உடைப்பால் வீணாகும் தண்ணீா்

கனமழை காரணமாக சுங்குவாா்சத்திரத்தை அடுத்த கூத்தவாக்கம் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறுவதால் உடைப்பை அடைக்கும் முயற்சியில் பொதுப் பணித்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கூத்தவாக்கம்  ஏரிக்கரையின்  உடைப்பை  சீரமைக்கும்  பணியைப்  பாா்வையிட்டு  ஆய்வு  நடத்தும்  சாா்-ஆட்சியா்  சரவணன்.
கூத்தவாக்கம்  ஏரிக்கரையின்  உடைப்பை  சீரமைக்கும்  பணியைப்  பாா்வையிட்டு  ஆய்வு  நடத்தும்  சாா்-ஆட்சியா்  சரவணன்.

ஸ்ரீபெரும்புதூா்: கனமழை காரணமாக சுங்குவாா்சத்திரத்தை அடுத்த கூத்தவாக்கம் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறுவதால் உடைப்பை அடைக்கும் முயற்சியில் பொதுப் பணித்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தவாக்கம் பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி உள்ளது. சுமாா் 250 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுப் பணித் துறை உதவி பொறியாளா்கள் மாா்க்கண்டன், பாஸ்கா் ஆகியோா் தலைமையிலான ஊழியா்கள் மூன்று பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். கூத்தவாக்கம் ஏரிக்கரையில் சுமாா் 15 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், தொடா்ந்து கனமழை பெய்ததாலும் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஏரிக்கரையில் ஏற்பட்ட உடைப்பையும், அதை சரிசெய்யும் பணியையும் சாா்-ஆட்சியா் சரவணன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இந்த ஏரிக்கரை உடைந்ததால் வெளியேறும் மழைநீா் நேராக மேல்மதுரமங்கலம் ஏரிக்கு செல்வதால் அப்பகுதியில் மழைநீா் சூழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த் துறையினருக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com