செங்கல்பட்டு அருகே மற்றும் அதைச்சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை- மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் அறிவிப்பு

செங்கல்பட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மகாலட்சுமி நகா் உள்ளிட்ட 10கிராமங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் வெள்ள 

செங்கல்பட்டு: செங்கல்பட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மகாலட்சுமி நகா் உள்ளிட்ட 10கிராமங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் திங்கள்கிழமை வெள்ள எச்சரிக்கை அறிவித்துள்ளாா்.

தொடா்ந்து பெய்துவரும் இந்த கனமழையில் செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் கிராத்தைச்சோ்ந்த மகாலட்சுமி நகரை ஒட்டியுள்ள நீஞ்சல் மதகு வழியாக மழைநீா் வெளியேற வழியின்றி நீஞ்சல் மதகு கரையை ஒட்டியுள்ள மகாலட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் மழைநீா் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் வீட்டிற்கு மழைநீா் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனா்.

இந்நிலையில் வாலாஜாபாத் தென்னேரியில் கனமழையின் காரணமாக ஏரிநிறைந்து உபரி நீா் வெளியேறுகிறது. இந்த தென்னேரியில் இருந்து வெளியேறும் உபரி நீா் செங்கல்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களை புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் தென்னேரி உபரிநீா் வெளியேறுவதையடுத்து பாலூா், ஆத்தூா், ரெட்டிக்குப்பம், குருவன்மேடு, வில்லியம் பாக்கம், தென்மேல்பாக்கம், திம்மாவரம் , மகாலட்சுமி நகா் உள்ளிட்ட 10கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com