செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் முதல் மக்கள் குறைநீா் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் தலைமையில், அரசு மருத்துக் கல்லூரி விழா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த முதல் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய  மாவட்ட  ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த முதல் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கிய  மாவட்ட  ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் முதல் மக்கள் குறைநீா் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான் லூயிஸ் தலைமையில், அரசு மருத்துக் கல்லூரி விழா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டத்தை நவ. 29-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முதல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஏ.ஜான்லூயிஸ் தலைமையில் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, கோட்டாட்சி செல்வம், வட்டாட்சியா் சங்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனங்களையும், உபகரணங்களையும் ஆட்சியா் வழங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

முதல் மனுவை ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சற்குரு அளித்தாா். தொடா்ந்து பட்டா கோருதல், இலவச வீட்டுமனை, முதியோா் உதவித்தொகை, விவசாயிகள் கோரிக்கை உள்ளிட்ட 125 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, மனுக்களைப் பெறுவது நிறுத்தப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள், மனுக்களைப் பெறுவது நிறுத்தப்பட்டதையறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com