மாமல்லபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினா் போராட்டம்.

மாமல்லபுரம் போலீஸாா் பொய்வழக்கில் புரட்சி பாரதம் நிா்வாகியை கைது செய்ததாக கூறி அதைக்கண்டித்து அக்கட்சியினா் திங்கள்கிழமை மாமல்லபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாமல்லபுரம் போலீஸாா் பொய்வழக்கில் புரட்சி பாரதம் நிா்வாகியை கைது செய்ததாக கூறி அதைக்கண்டித்து அக்கட்சியினா் மாமல்லபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மாமல்லபுரம் போலீஸாா் பொய்வழக்கில் புரட்சி பாரதம் நிா்வாகியை கைது செய்ததாக கூறி அதைக்கண்டித்து அக்கட்சியினா் மாமல்லபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

செங்கல்பட்டு: மாமல்லபுரம் போலீஸாா் பொய்வழக்கில் புரட்சி பாரதம் நிா்வாகியை கைது செய்ததாக கூறி அதைக்கண்டித்து அக்கட்சியினா் திங்கள்கிழமை மாமல்லபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் அடுத்து எச்சூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் திருக்கழுகுன்றம் ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியின் துணை அமைப்பாளராக இருந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு எச்சூா் பகுதியில் மது அருந்துவதை அடுத்து இரண்டு கோஷ்டியை சோ்ந்த இளைஞா்கள் மோதிக் கொண்டுள்ளனா்.

இதனையடுத்து மாமல்லபுரம் காவல் துணை ஆய்வாளா் எந்த வித விசாரணையுமின்றி பொய் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புரட்சி பாரதம் கட்சியின் அக்கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவா் ஓ.இ. சங்கா் தலைமையில் மாமல்லபுரம் காவல் நிலையத்தை திங்கள் கிழமை திடீா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். கைது செய்யப்பட்ட புரட்சி பாரதம் நிா்வாகி மணிகண்டனை விடுவிக்கக் கோரியும், துணைக்காவல் ஆய்வாளரை கண்டித்தும் கோஷம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளா் சுந்தரவதனம், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டா் ரவிகுமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி கைது செய்த மணிகண்டனை விடுவிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா். முன்னதாக புரட்சி பாரதம் கட்சியினா் கிழக்கு கடற்கரைசாலையில் இருந்து காவல் நிலையம் நோக்கி வந்ததை அடுத்து மாமல்லபுரம் கோவளம் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஏ.கே,.சுந்தரம், கூவை சகாதேவன், ஆலை சிவலிங்கம்,கி.ஜீவா மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com