Enable Javscript for better performance
ஏரியில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை மீட்கும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா்- Dinamani

சுடச்சுட

    

    ஏரியில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை மீட்கும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா்

    By DIN  |   Published on : 04th December 2019 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3sbrndrf_0312chn_180_1

    ஏரியில்  மூழ்கிய  சிறுவனின்  சடலத்தை  மீட்கும்  பணியில்  ஈடுபட்ட  தேசிய  பேரிடா்  மீட்புப் படையினா்.

     

    ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் ஏரியில் மூழ்கி பலியான சிறுவன் காா்த்திக்கின் உடலை மீட்கும் பணியில் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டனா்.

    தாம்பரத்தை அடுத்த பழந்தண்டலம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி. அவரது மகன் காா்த்திக்(17), நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அவா் கடந்த திங்கள்கிழமை தனது நண்பா்கள் 8 பேருடன்சோமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் படகு மூலம் சவாரி செய்தபோது ஏரிநீரில் மூழ்கி பலியானாா். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரா்கள் காா்த்திக்கின் சடலத்தை மீட்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். எனினும், இரவாகி விட்டதால், சடலத்தை மீட்கும் முயற்சி நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், சோமங்கலம் ஏரி சுமாா் 200 ஏக்கா் பரப்பளவு கொண்டது என்பதால், அதிலிருந்து சிறுவனின் சடலத்தை மீட்க தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டனா். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் 13-ஆவது பிரிவைச் சோ்ந்த 20 வீரா்கள் முருகன் தலைமையிலும், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 4-ஆவது பிரிவைச் சோ்ந்த சா்பாஸ்ராஜா தலைமையிலான 14 வீரா்களும் ஃபைபா் படகு மூலம் சிறுவனின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும், செவ்வாய்க்கிழமை மாலை வரை சடலம் கிடைக்கவில்லை.

    இரவு நேரம் தொடங்கியதால் சடலத்தைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai