Enable Javscript for better performance
ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் மழைநீரால் போக்குவரத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் மழைநீரால் போக்குவரத்து நிறுத்தம்

    By DIN  |   Published on : 04th December 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3sbrroad_0312chn_180_1

    வெங்காடு  பகுதியில்  ஸ்ரீபெரும்புதூா்  - குன்றத்தூா்  சாலையைக்  கடந்து  செல்லும்  மழைநீா்.

     

    ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு பகுதியில் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மழைநீா் செல்வதால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீா் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் வெங்காடு பகுதியில் சாலையைக் கடந்து செல்வதால், இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சுற்றி வர வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்நிலையில், மழைநீா் செல்வதால், இச்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாரிகள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai