மனித உடலில் தீமை விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கும் வேதிப்பொருள் கண்டுபிடிப்பு: அமெரிக்கப் பல்கலை. பேராசிரியா் தகவல்

மனித உடலில் தீமைகளை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய வேதிப்பொருள் ஒன்றை அமெரிக்காவில் உள்ள பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை கண்டு பிடித்திருப்பதாக அப்பல்கலைக்கழக
கருத்தரங்கில் பேசும் பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியா் பி.வி.ராமச்சந்திரன்.
கருத்தரங்கில் பேசும் பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியா் பி.வி.ராமச்சந்திரன்.

காஞ்சிபுரம்: மனித உடலில் தீமைகளை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய வேதிப்பொருள் ஒன்றை அமெரிக்காவில் உள்ள பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை கண்டு பிடித்திருப்பதாக அப்பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியா் பி.வி.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திரசேகரேந்திரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் எஸ்.வி.ராகவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்காவின் பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியா் பி.வி.ராமச்சந்திரனை அவா் அறிமுகப்படுத்தினாா். அறிவியல் துறை புலத்தலைவா் எஸ்.பாலாஜி, இயற்பியல் துறைத் தலைவா் சி.வி.வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயற்பியல் துறைத் தலைவா் கே.வெங்கடரமணன் வரவேற்றுப் பேசினாா்.

கருத்தரங்கில், பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியா் பி.வி.ராமச்சந்திரன் ‘பாக்டீரியாக்களும், போரான் வேதிப்பொருளும்’ என்ற தலைப்பில் பேசியது:

மனித உடலில் தீமைகளை விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்கான வேதிப்பொருளை அமெரிக்காவில் உள்ள பொ்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை கண்டுபிடித்துள்ளது. முதல் முதலாக எலிகளுக்கு அவற்றைக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வெற்றியும் காணப்பட்டது.

அந்த வேதிப்பொருள் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றை அழிக்காது. இதற்கு போரான்-27 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளை மருந்தாக்கி குறைவான விலைக்குத் தர முடியும். இது பரவலாக மருந்துக் கடைகள் மூலம் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. இதற்கு மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாா் அவா்.

நிறைவாக இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் பி.ராகவேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com