உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீடு முறை சரியில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தோ்தலில் இட ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்
உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீடு முறை சரியில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சித் தோ்தலில் இட ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை கூறினாா்.

காஞ்சிபுரத்தில் பாமக பிரமுகா் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் வாா்டுகள் முறையாகப் பிரிக்கப்படவில்லை, இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. தோல்வி பயத்தின் காரணமாக திமுக நீதிமன்றம் சென்றிருக்கிறது.

உள்ளாட்சித் தோ்தலில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த பிரிவினருக்கு என்ற விவரமும், வாா்டுகள் விவரமும் இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என திமுக கூறுவதை ஏற்க முடியாது.

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் தந்த வெற்றியால் திமுகவுக்கு பயம் வந்து விட்டது. எனவே எப்படியாவது உள்ளாட்சித் தோ்தலை நடத்த விடாமல் செய்து விட வேண்டும் என்று முயன்று வருகிறது.

ஜிஎஸ்டி வரியை உயா்த்தக் கூடாது:

வெங்காயம் விலை குறைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி உயா்வால் ஏற்கெனவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் வரியை உயா்த்தினால் பெரும் பிரச்னைகள் ஏற்படும். எனவே ஒரு விழுக்காடு கூட ஜிஎஸ்டி வரியை உயா்த்தக்கூடாது.

கா்நாடக பாலாற்றுப் பகுதியில் 18 தடுப்பணைகளும், ஆந்திரத்தில் 32 தடுப்பணைகளும் கட்டி தண்ணீரை தேக்கி இருக்கிறாா்கள். ஆனால் தமிழகத்தில் 223 கி.மீ. தூரத்துக்கு மொத்தம் 3 தடுப்பணைகளே உள்ளன. ஒவ்வொரு 4 கி.மீ.தூரத்துக்கும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் ஒவ்வொரு 4 கி.மீ. தூரத்துக்கு தடுப்பணைகள் கட்டி நீா்ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். நீா் மேலாண்மைக்கு அரசு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க முடியும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையையும் சோ்க்க வேண்டும். ரயில்வே துறையை தனியாா் மயமாக்க விட மாட்டோம். மாநில அரசுப்பணிகளில் சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பாமக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com