Enable Javscript for better performance
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு  சொந்தமான ரூ.1.70 கோடி நிலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏகாம்பரநாதர் கோயிலுக்கு  சொந்தமான ரூ.1.70 கோடி நிலம் மீட்பு

    By DIN  |   Published on : 13th February 2019 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக லாலா தோட்டம், சர்வதீர்த்த குளம் அருகே 34 சென்ட் நிலம் இருந்தது. ரூ. 1.70 கோடி மதிப்பிலான இந்த இடத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தெய்வசிகாமணி என்பவர் ஆக்கிரமித்து வந்ததாகத் தெரிகிறது. 
    இந்நிலையில்,  இந்து சமய அறநிலைத் துறை சார்பில் லாலா குட்டை பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், வாகன நிறுத்தம் ஆகியவை தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
    இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். 
    இதுதொடர்பாக,  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி தலைமையில், அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று, பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai