சுடச்சுட

  

  சேத்துப்பட்டு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு:  பொதுமக்கள் அவதி

  By DIN  |   Published on : 13th February 2019 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சேத்துப்பட்டு ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
  குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சியில் 1,500-க்கும மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியின் 8 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, 4 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
  இம்முறை வடகிழக்கு பருவமழை குறைவான அளவே பெய்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் காலை நேரத்தில் சுமார் 30 நிமிடத்துக்கும் குறைவான நேரமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
   இருப்பினும் மேடான பகுதிகளில் வசிப்போருக்கு முற்றிலும் குடிநீர் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
  நிலத்தடி நீராதாரம் குறைந்ததால், பல மணி நேரம் மின்மோட்டார்களை இயக்கினாலும் குறைந்த அளவு நீரே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சென்றடைகிறது. இதனால்தான் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை என்று ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
  கோடைகாலம் நெருங்கும் முன் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று சேத்துப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த கிராமத்தினர் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai