சுடச்சுட

  


  திமுக தலைவர் முக.ஸ்டாலின் வியாழக்கிழமை  காஞ்சிபுரம் வருகிறார். 
  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காஞ்சிபுரத்துக்கு வர உள்ளார். 
  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சின்னகாஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் கருணாநிதியின் உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். 
  அத்துடன், ரங்கசாமி குளம்,  பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் திமுகவின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, கொடியேற்ற உள்ளார். தொடர்ந்து, காந்தி சாலை- தேரடியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai