வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி


சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ. 26 லட்சம் மதிப்பில் மகேந்திரா சிட்டி ரிசர்ச் வேலி நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், வனத்துறை இயக்குநர் யோகேஷ் சிங் (ஐ எஃப் எஸ்), சுதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிக்கப்பு நிலையத்தை திறந்துவைத்தனர்.
இதுகுறித்து, மகேந்திரா சிட்டி ரிசர்ச் வேலி மேலாளர் சங்கரன்குட்டி கூறுகையில், ரூ. 26 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்ட இந்த குடிநீர் நிலையம், மணிக்கு 600 லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்றார். 
நிகழ்ச்சியில், மகேந்திரா வேல்டு சிட்டி துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com