முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
குறுகிய கால கல்வெட்டுப் பயிற்சி: மார்ச் 4-இல் தொடக்கம்
By DIN | Published On : 28th February 2019 04:11 AM | Last Updated : 28th February 2019 04:11 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி முகாம் அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கும், வரலாற்று ஆர்வலர்கள் 25 பேருக்கும் குறுகிய கால கல்வெட்டுப் பயிற்சி முகாம் வரும் மார்ச் 4, 5 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன. முகாமில், தொல்லியல்-கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் பயிற்சி அளிக்கவுள்ளார்.
இப்பயிற்சியின் நிறைவாக கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதில், விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் பங்கு பெற தங்கள் பெயரை மார்ச் 3-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்ய வேண்டும். (முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை) மேலும் விவரங்களுக்கு, 8189965485, 8428255843 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.