சுடச்சுட

  


  காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்துக்கு உள்பட்ட கடல் மங்கலம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 16 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
  முகாமுக்கு, உத்தரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி தலைமை வகித்தார். மண்டலத் தனி வட்டாட்சியர் கீதாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை, முன்னாள் ஊராட்சித் தலைவர் வீராசாமி, வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாறுதல், திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 48 மனுக்கள் இம்முகாமில் பெறப்பட்டன. அவற்றில் 16 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 
  வெள்ளகொண்ட அகரத்தில்...
  மதுராந்தகத்தை அடுத்த வெள்ளகொண்ட அகரத்தில் செய்யூர் வருவாய்த் துறை சார்பில், நடைபெற்ற முகாமுக்கு, செய்யூர் தனி வட்டாட்சியர் செல்வசீலன் தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோறுதல், பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனிவட்டாட்சியர் செல்வசீலனிடம் பொதுமக்கள் 16 மனுக்களை அளித்தனர். அதில் 8 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
  ஸ்ரீபெரும்புதூரில்...
  வெங்காடு பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த 30 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
  ஸ்ரீபெரும்புதூர் மண்டலத் துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றியச் செயலர் போந்தூர் செந்தில்ராஜன், வெங்காடு முன்னாள் தலைவர் உலகநாதன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி கலந்துகொண்டு, வெங்காடு பகுதியைச் சேர்ந்த 30 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, பட்டா உள்பிரிவு, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 32 பேர் மனுக்களை வழங்கினர். முகாமில், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai