சுடச்சுட

  


  தமிழ்நாடு-புதுச்சேரி தலித் கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் சார்பில் இந்திய கத்தோலிக்க திருச்சபையில் தலித் கிறிஸ்தவர்களின் உரிமை கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
  அமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் எல்.யேசு மரியான், ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றினார். 
  தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.தன்ராஜ் ஆகியோர் முன்னிவை வகித்தனர். இந்திய தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் பறிக்கக் கூடாது. திருச்சபையின் சொத்துக்களை தலித்துகளுக்கும் பயன்படுத்தவேண்டும். 
  திருச்சபை நிர்வாகத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai