சுடச்சுட

    

    பட்டு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி திமுகவினர் மனு

    By DIN  |   Published on : 12th January 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பட்டு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி, கைத்தறித் துணி நூல் துறை அதிகாரியிடம் திமுகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
    காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் அதன் உறுப்பினர்கள் அண்மையில் முறைகேடு புகார் அளித்து போராட்டம் நடத்தினர். 
    அதுபோல், முருகன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களிலும் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்பேரில், உரிய விசாரணை நடத்த வேண்டும், நெசவாளர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு மாவட்டச் செயலரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர் தலைமையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்டோர் கைத்தறி துணிநூல் துறை இணை இயக்குநர் செல்வத்திடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர். மாவட்ட,நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai