சுடச்சுட

  

  மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
   மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செயலர் சத்யசாயி தலைமையில் பிலாப்பூர், சிதண்டி, மாமண்டூர், பழமத்தூர், புக்கத்துறை, பழையனூர், கள்ளபிரான்புரம், ஜானகிபுரம், வையாவூர், சூரை ஆகிய கிராமங்களின் மக்கள் குறைகளைக் கேட்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார்.
   நிகழ்ச்சியில், மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் சாலை, குடிநீர் வசதி, அடிக்கடி ஏற்படும் மின்தடை, முதியோர் உதவித் தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்த கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ எஸ்.புகழேந்தியிடம் வழங்கி, அதனை நிறைவேற்றித் தருமாறு கோரினர்.
   அப்போது எம்எல்ஏ புகழேந்தி பேசுகையில், "நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ என்பதால் மாவட்ட உயர் அதிகாரிகளின் துணைகொண்டு அனைத்து குறைகளையும் தீர்த்து வைக்கிறேன்' என உறுதி அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai