சுடச்சுட

  

  செங்கல்பட்டு அண்ணாநகரில் கே.சி.ஜே.சுவாமி விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் வெள்ளிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
   விழாவுக்கு, பள்ளித் தாளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மாலினி, பள்ளி நிர்வாகிகள் சேதுராமன், விஜயகோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் அமுதா தேசியக்கொடி, விளையாட்டுக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றார். தொடர்ந்து, விளையாட்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
   மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கங்கள், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai