மலைப்பட்டு கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத நீர்த் தேக்கத் தொட்டி

மலைப்பட்டு கிராமத்தில் ரூ. 14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக்
மலைப்பட்டு கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத நீர்த் தேக்கத் தொட்டி


மலைப்பட்டு கிராமத்தில் ரூ. 14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைப்பட்டு கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு மலைப்பட்டு மற்றும் மாகான்யம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, மலைப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், மலைப்பட்டு ஊராட்சியில் மாகான்யம் சாலையில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்ததால், தொட்டி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, பழுதடைந்த குடிநீர் தேக்கத் தொட்டியை ஊரக வளர்ச்சித் துறையினர் கடந்த ஆண்டு இடித்து அகற்றினர். 
பின்னர், இடிக்கப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, 2017-2018-ஆம் நிதியாண்டில் ஒன்றிய பொது நிதி மூலம் மலைப்பட்டு பகுதியில் மாகான்யம் செல்லும் சாலையில் ரூ. 14.40 லட்சத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இந்த நீர்த் தேக்கத் தொட்டியை, இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வராததால் மலைப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட திருமலை நாயக்கர் தெரு, ராமதாஸ் தெரு, விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த ஒரு வருடமாக குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
எனவே பொதுமக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க புதிதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைப்பட்டு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com