துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள்: இன்று தேசிய ஆணையத் தலைவர் நேரில் ஆய்வு

துப்புரவுப் பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக துப்புரவுத் தொழிலாளர் நல தேசிய ஆணையத் தலைவர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொள்ள


துப்புரவுப் பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக துப்புரவுத் தொழிலாளர் நல தேசிய ஆணையத் தலைவர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு, நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை துப்புரவுத் தொழிலாளர்கள் நல தேசிய ஆணையத் தலைவர் மன்ஹர் வால்ஜிபாய் ஜலா, உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மானி ஆகியோர் ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்துக்கு வருகை தருகின்றனர். 
ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையத்தில் 10.30 மணியளவில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய முறை, சுகாதாரம், சொந்த வீடு அமைத்துத் தருதல், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல், கடன், நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர் நலச்சங்கங்கள், பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com