எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
By DIN | Published On : 24th January 2019 03:28 AM | Last Updated : 24th January 2019 03:28 AM | அ+அ அ- |

அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் இப்பொதுக் கூட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமசந்திரன், ஒன்றியச் செயலர்கள் எழிச்சூர் ராமசந்திரன், எறையூர் முனுசாமி, குன்றத்தூர் பேரூராட்சி செயலர் அலெக்சாண்டர், மாங்காடு நகர இளைஞர் அணித் தலைவர் ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.