கல்லூரியில் கணினி, பொறியியல் சங்க தொடக்க விழா
By DIN | Published On : 01st July 2019 12:50 AM | Last Updated : 01st July 2019 12:50 AM | அ+அ அ- |

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் "சிக்னஸ் -19' சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர், திருச்சி மற்றும் சென்னை தனலட்சுமி சீனிவாசன் குழுமக் கல்வி நிலையங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.சேகர் முன்னிலை வகித்தார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக இனாடிக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் ரங்கசாமி பங்கேற்று மாணவர்கள் பயன்பெறும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றியும் தொழில் முனைவோர் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். கணினித்துறை தலைவர் எம்.பிரேமலதா நன்றி கூறினார்.