சுடச்சுட

  

  உலக கடல் பயண வழிகாட்டி தினம்: கலங்கரை விளக்கத்தில் மாணவர்களுக்கு இலவசஅனுமதி

  By DIN  |   Published on : 02nd July 2019 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamalapuram


  உலக கடல் பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் குறித்து அறிந்துகொள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். 
  மாமல்லபுரத்தில் பல்லவர் கால கலங்கரை விளக்கம் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதிய கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரகம் சார்பில் அலுவலர்கள் பராமரித்து வருகின்றனர். 
  கலங்கரை விளக்கத்தையும் அதுதொடர்பான காட்சிக் கருவிகளையும் காண பெரியவர்களுக்குத் தலா ரூ.10, சிறியவர்களுக்குத் தலா ரூ.5, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தலா ரூ.25 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
  இந்த நிலையில், உலக கடல் பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாமல்லபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கலங்கரை விளக்கத்தைச் சுற்றிப் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் விளக்கம் அளித்தனர்.  
  இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறியது: 
  நவீன தொழில்நுட்பத்தில் தற்போது தானியங்கி மூலம் செயல்படும் கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கலங்கரை விளக்க ஆய்வாளர் வசந்த் விளக்கினார். முதன் முதலாக மண்ணெண்ணெய் விளக்கு மூலம் கலங்கரை விளக்கத்தில் இருந்து வெளிச்சம் எப்படி காண்பிக்கப்பட்டது என்பதையும், அப்போது பயன்படுத்தப்பட்ட சுழலும் விளக்கு மற்றும் பழைமையான சாதனங்கள் குறித்தும் தெரிந்துகொண்டோம். மேலும் தற்போதைய கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கும் ஆய்வாளர் பதில் அளித்தார் என தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai