மறைமலை நகர் அஞ்சல் நிலையத்தில் துரித பார்சல் சேவை தொடக்கம்

மறைமலைநகர் தொழிற்பேட்டையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் துரித பார்சல் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. 
மறைமலை நகர் அஞ்சல் நிலையத்தில் துரித பார்சல் சேவை தொடக்கம்


மறைமலைநகர் தொழிற்பேட்டையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் துரித பார்சல் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. 
இந்த நிகழ்ச்சிக்கு, செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. அமுதா தலைமை வகித்து, துரித அஞ்சல் பார்சல் சேவையை தொடங்கி வைத்துப் பேசியது: 
செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகத்துக்கு உள்பட்டு 45  துணை அஞ்சலகங்களும், 196 கிளை அஞ்சலகங்களும் செயல்பட்டு வருகின்றன. 
மறைமலைநகர் அஞ்சல் நிலையத்தில் இதுவரை  நாள்தோறும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விரைவு அஞ்சல் சேவை நடைபெற்று வந்தது. 
ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து  காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை  விரைவு அஞ்சல் அனுப்ப முடியும். குறைந்த கட்டணத்தில் பார்சல்கள் 35 கிலோ வரை அனுப்பமுடியும். 
செங்கல்பட்டு கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இங்குதான் முதல் முறையாக இந்த சேவையைத் தொடங்கியுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், தபால்துறை ஆய்வாளர் சந்திரகுமார், அஞ்சல் கோட்ட உதவி  கண்காணிப்பாளர்கள் மின்ஸ், கீதா, மக்கள் தொடர்பு அலுவலர் ராமமூர்த்தி,  மறைமலைநகர் அஞ்சல் நிலைய அதிகாரி பிரியங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com