சுடச்சுட

  


  சென்னை புறநகர் ரயில் சேவையில் (குறிப்பிட்ட ரயில் சேவைகளில்) புதன்கிழமை (ஜூலை 10) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. 
  ஜூலை 10 முதல் மாற்றம் செய்யப்படவுள்ள ரயில் சேவைகள்:  மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு  இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்தை அதிகாலை 12.25 மணிக்கு அடையும்.
   மூர் மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இரவு 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரயில் இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு, ஆவடியை இரவு 11.10 மணிக்கு அடையும்.
  திருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் நேரம் மாற்றப்படவுள்ளது. இந்த ரயில் திருத்தணியில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்தை இரவு 11.35 மணிக்கு அடையும்.
  மூர் மார்க்கெட் வளாகத்தில்  இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு  காலை 9.35 மணிக்கு கும்மிடிப்பூண்டியை  அடையும் மின்சார ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, கும்மிடிப்பூண்டியை காலை 9.50 மணிக்கு அடையும். கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு, மூர் மார்க்கெட் வளாகத்தை முற்பகல் 11.25 மணிக்கு அடையும். இதுதவிர, சில ரயில்கள் சென்றடையும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai