சுடச்சுட

  
  camp


  ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், பிரதமரின் கிஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  2 ஹெக்டேர் நிலமுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பிரதமரின் கிஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரொக்கம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில், விவசாயிகள் சேர்கைக்கான சிறப்பு முகாம்கள் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றன. 
  இதையடுத்து இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) சிவகுமார் சிங் கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் மாவட்ட வேளாண் துறை தரக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவி இயக்குனர் சோமு உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai