சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் விடையாற்றி உற்சவம்

செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் விடையாற்றி உற்சவம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சேப்பாட்டியம்மன். 
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சேப்பாட்டியம்மன். 


செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் உள்ள சேப்பாட்டியம்மன் கோயிலில் இராப்பிறையார் விடையாற்றி உற்சவம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் இராப்பிறையார் உற்சவம் முக்கியமானது.
அனைத்து சமூகத்தினரும்  பங்கேற்கும் இவ்விழா கடந்த ஜூலை 1-ஆம் தேதி பந்தக்கால் நடுதல், 2-ஆம் தேதி  காப்புக்  கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு  சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
அம்மனுக்கு விரதம் மேற்கொண்ட  பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து கடந்த சனிக்கிழமை காலையில் பால்குடம் சுமந்து வந்து கோயிலில் அம்மனுக்கு  அபிஷேகம் செய்து வழிபட்டனர். 
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள களத்துமேடு பகுதியில் பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு பெரும் படையல் வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து, இராப்பிறையார் உற்சவ நிறைவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. 
அப்போது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவரை ஊர்வலமாகக் கொண்டு சென்று கைலாசநாதர் கோயிலில் வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், நிர்வாகிகள், பெரிய நத்தம் கிராமத்தினர், மதுரைவீரன் கோயில் கிராமத்தார்கள், பர்வதராஜ குல கிராமத்தினர், குண்டூர் கிராமத்தார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com