சுடச்சுட

  

   அத்திவரதர் பெருவிழா: அடிப்படை வசதிகளை அதிகரிக்கக் கோரிக்கை  

  By DIN  |   Published on : 14th July 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அத்திவரதர் பெருவிழாவையொட்டி நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருவதால் மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், குடிநீர்த் தொட்டிகளை கூடுதலாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   அத்திவரதர் பெருவிழாவின் 13-ஆம் நாளான சனிக்கிழமை மாடவீதிகள் வழியாக வரிசையில் வந்த பக்தர்கள் கிழக்கு கோபுர நுழைவுப் பகுதிக்கு வரும்போதே சிலர் மயக்கம், மூச்சுத் திணறல், கால்வலி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டனர். காவலர்கள், தன்னார்வலர்கள் அவர்களை மருத்துவ முகாமுக்கு வரவழைத்து முதலுதவி அளித்தனர்.
   அத்துடன், சிலரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருவதால் மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், குடிநீர்த் தொட்டிகளை கூடுதலாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
   முக்கியஸ்தர்கள் வரிசையில் நெரிசல்: பொது தரிசனத்தில் வழக்கம் போல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நீண்ட நேரம் காத்திருந்து வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஆனால், முக்கியஸ்தர்கள் வரிசையில் அரசுத்துறை ஊழியர்கள், காவலர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் பரிந்துரையின் பேரில் அனுமதிச் சீட்டு இல்லாமலே முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்றனர்.
   இதனைத் தடுத்து நிறுத்திய காவலர்களிடம், அரசுத்துறை அலுவலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றனர். இதனால், முக்கியஸ்தர்கள் வரிசையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால் அனுமதிச் சீட்டு பெற்று முக்கியஸ்தர்கள் வரிசையில் வந்தவர்கள் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai