Enable Javscript for better performance
கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலைக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    
    house


     கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கீழார் கொல்லை கிராமத்தில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலைக்கு மத்திய புலனாய்வுப் பிரிவினர் புதன்கிழமை சீல் வைத்ததுடன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள சாராயம் அழிக்கப்பட்டது.  
    கீழார் கொல்லை கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் தனியார் போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக  மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. 
    இதையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு விழுப்புரம் சரக  காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் அழகிரி உள்ளிட்ட போலீஸார் புதன்கிழமை மாலை அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  
    அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் சுமார் 1,750 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 15 ஆயிரம் மது பாட்டில்கள், 15 ஆயிரம் ஸ்டிக்கர்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.
    போலி மதுபான ஆலை நிர்வாகியான சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமாரை (42) கைது செய்தனர். 
    முதல் கட்ட விசாரணையில், அந்த பண்ணை வீட்டை சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் வாடகைக்கு எடுத்து, பிரேம்குமார் உதவியுடன் போலி மதுபானம் தயாரித்து வந்தது தெரியவந்தது. 
    இவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள குமார் என்பவர் எரிசாராயம் சப்ளை செய்துள்ளார். இந்நிலையில் செல்வம், பிரேம்குமார் மற்றும் குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai